Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

அடுத்த தேர்வு நாள்: 05.09.2021 பாடப்பகுதி: எட்டாம் வகுப்பு - PROFIT, LOSS & DISCOUNT.

TIME AND WORK QUESTIONS - ONLINE TEST - VIII STD NEW SYLLABUS

TIME AND WORK QUESTIONS - ONLINE TEST - VIII STD NEW SYLLABUS

TIME AND WORK QUESTIONS - ONLINE TEST - VIII STD NEW SYLLABUS


TIME AND WORK QUESTIONS PDF - ONLINE TEST - VIII STD NEW SYLLABUS  தேர்வானது எட்டாம் வகுப்பு வாழ்வியல் கணிதம் பாடத்தில் நேரம் மற்றும் வேலை பாடப்பகுதியில் இருந்து கேள்விகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 

இதேர்வானது வரவிருக்கும் TNPSC GROUP-4GROUP-2 & all TNPSC EXAMS மற்றும் TRB தேர்விற்கும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான NMMS தேர்விற்கும் உதவியாக இருக்கும்.

உங்கள் ஜி-மெயில் ஐடியை கீழே உள்ள COMMENTS BOX மூலம் தெரிவித்தால் 2021 ஆம் ஆண்டு நடந்த டிஎன்பிஸ்சி தேர்வுகளில் கேட்கப்பட்ட கணிதக் கேள்விகளை PDF FILES ஆக உங்கள் ஜி-மெயில் ஐடிக்கு இலவசமாக அனுப்பப்படும்.

இத்தேர்விற்கான SHORT CUT ANSWERS & DETAILED EXPLANATIONS - PDF FILE ஆக நமது டெலிகிராம் குரூப்பில் பகிரப்படும். 

TO JOIN OUR TELEGRAM CHANNEL


போட்டித் தேர்வர்கள் கீழே உள்ள START QUIZ BUTTON ஐ கிளிக் செய்து TNPSC Online Test தேர்வினை முயற்சி செய்யுங்கள்.

இந்த தேர்வின் வினாக்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் கீழே பதிவிடப்பட்டுள்ளது. 
 

1) A student can type 21 pages in 15 minutes. At the same rate, how long will it take the student to type 84 pages?

ஒரு மாணவனால் 15 நிமிடங்களில் 21 பக்கங்களைத் தட்டச்சுச் செய்யமுடியும். இதே வேகத்தில், அந்த மாணவனுக்கு 84 பக்கங்கள் தட்டச்சுச் செய்ய எவ்வளவு நேரம் ஆகும்?

A) 60 min

B) 50 min

C) 55 min

D) 65 min

 

2) If 35 women can do a piece of work in 16 days, in how many days will 28 women do the same work?

35 பெண்கள் ஒரு வேலையை 16 நாள்களில் செய்து முடிப்பர் எனில், 28 பெண்கள் அதே வேலையை எத்தனை நாள்களில் செய்து முடிப்பர்?

A) 30 days

B) 25 days

C) 20 days

D) 32 days

 

3) If a company pays ₹6 lakh for 15 workers for 20 days, how much would it need to pay for 5 workers for 12 days?

ஒரு நிறுவனமானது 20 நாள்களுக்கு 15 வேலையாள்களுக்கு ₹6 இலட்சம் தொகையை ஊதியமாக வழங்குகிறது எனில், அந்நிறுவனத்திற்கு 5 வேலையாள்களுக்கு 12 நாள்களுக்கு ஊதியமாக வழங்க எவ்வளவுத் தொகை தேவை?

A) ₹ 1.1 இலட்சம்

B) ₹ 1.2 இலட்சம்

C) ₹ 1.3 இலட்சம்

D) ₹ 1.5 இலட்சம்

 

4) A mat of length 180 m is made by 15 women in 12 days. How long will it take for 32 women to make a mat of length 512 m?

180 மீ நீளமுள்ள ஒரு பாயினை 15 பெண்கள் 12 நாள்களில் செய்தனர். 512 மீ நீளமுள்ள ஒரு பாயினை 32 பெண்கள் செய்ய எத்தனை நாள்கள் ஆகும்?

A) 10

B) 12

C) 14

D) 16

 

5) If x and y vary directly, find the constant of proportionality, k when x = y = 5

X மற்றும் y ஆகியவை நேர் மாறலில் உள்ளன எனில், x = y =5 எனும்போது, விகிதசம மாறலின் மாறிலி (k) இன் மதிப்பைக் காண்க.

A) 1

B) 0

C) 10

D) 0.5

 

6) If x and y vary inversely, find the constant of proportionality when x = 64 and y = 0.75

x மற்றும் y ஆகியவை எதிர் மாறலில் உள்ளன எனில், x = 64 மற்றும் y =0.75 எனும்போது, விகிதசம மாறலின் மாறிலியைக் காண்க.

A) 45

B) 48

C) 46

D) 75

 

7) If 81 students can do a painting on a wall of length 448 m in 56 days, then how many students can do the painting on a similar type of wall of length 160 m in 27 days?

81 மாணவர்கள் 448 மீ நீளமுள்ள ஒரு சுவரில் ஓர் ஓவியத்தை 56 நாள்களில் வண்ணமிடுவர் எனில், 160 மீ நீளமுள்ள அது போன்ற ஒரு சுவரில் 27 நாள்களில் அந்த ஓவியத்தை எத்தனை மாணவர்கள் வண்ணமிடுவர்?

A) 60

B) 50

C) 45

D) 65

 

8) If 48 men working 7 hours a day can do a work in 24 days, then in how many days will 28 men working 8 hours a day can complete the same work?

48 ஆண்கள் ஒரு வேலையை நாளொன்றுக்கு 7 மணி நேரம் வேலை செய்து 24 நாள்களில் முடிப்பர் எனில், 28 ஆண்கள் அதே வேலையை நாளொன்றுக்கு 8 மணி நேரம் வேலை செய்து எத்தனை நாள்களில் முடிப்பர்?

A) 34

B) 32

C) 36

D) 30

 

9) 24 men can make 48 articles in 12 days. Then, 6 men can make _____ articles in 6 days.

24 ஆண்கள் 12 நாள்களில் 48 பொருள்களை செய்வர் எனில், 6 ஆண்கள் ___________ பொருள்களை 6 நாள்களில் செய்வர்.

A) 4

B) 6

C) 5

D) 10

 

10) 15 workers can lay a road of length 4 km in 4 hours. Then, _____ workers can lay a road of length 8 km in 8 hours.

15 வேலையாள்கள் 4 கி.மீ நீளமுள்ள சாலையை 4 மணி நேரத்தில் அமைப்பர் எனில், ______________ வேலையாள்கள் 8 கி.மீ நீளமுள்ள சாலையை 8 மணி நேரத்தில் அமைப்பர்.

A) 15

B) 18

C) 14

D) 16

 

11) 25 women working 12 hours a day can complete a work in 36 days. Then, 20 women must work _____ hours a day to complete the same work in 30 days.

நாளொன்றுக்கு 12 மணி நேரம் வேலை செய்து ஒரு வேலையை 25 பெண்கள் 36 நாட்களில் முடிப்பர் எனில், 20 பெண்கள் நாளொன்றுக்கு  _______________ மணி நேரம் வேலை செய்து அதே வேலையை 30 நாள்களில் முடிப்பர்.

A) 16

B) 18

C) 15

D) 20

 

12) In a camp there are 420 kg of rice sufficient for 98 persons for 45 days. The number of days that 60 kg of rice will last for 42 persons is _____.

ஒரு முகாமில் 98 நபர்களுக்கு 45 நாள்களுக்கு போதுமான 420 கி.கி அரிசி உள்ளது எனில், 42 நபர்களுக்கு 60 கி.கி அரிசியானது ___________ நாள்களுக்கு மட்டுமே போதுமானதாகும்.

A) 15

B) 16

C) 14

D) 18

 

13) A and B together can do a piece of work in 16 days and A alone can do it in 48 days. How long will B take to complete the work?

A மற்றும் B ஆகிய இருவரும் இணைந்து ஒரு வேலையை 16 நாள்களில் முடிப்பர். A தனியே அந்த வேலையை 48 நாள்களில் முடிப்பர் எனில், B தனியே அந்த வேலையை எத்தனை நாள்களில் முடிப்பார்?

A) 26

B) 22

C) 24

D) 28

 

14) P and Q can do a piece of work in 20 days and 30 days respectively. They started the work together and Q left after some days of work and P finished the remaining work in 5 days. After how many days from the start did Q leave?

P மற்றும் Q ஆகியோர் ஒரு வேலையை முறையே 20 மற்றும் 30 நாள்களில் முடிப்பர் அவர்கள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து வேலையைத் தொடங்கினர். சில நாள்கள் வேலை செய்த பிறகு Q ஆனவர் சென்றுவிடுகிறார். மீதமுள்ள வேலையை P ஆனவர் 5 நாள்களில் முடிக்கிறார் எனில், தொடங்கியதிலிருந்து எத்தனை நாள்களுக்கு பிறகு Q வேலையை விட்டுச் சென்றார்?

A) 8

B) 9

C) 6

D) 7

 

15) A works 3 times as fast as B and is able to complete a work in 24 days less than the days taken by B. Find the time in which they can complete the work together.

A ஆனவர் B என்பவரைக் காட்டிலும் வேலை செய்வதில் 3 மடங்கு வேகமானவர். அவரால் அந்தப் வேலையை, B எடுத்துக் கொண்ட நேரத்தை விட 24 நாள்கள் குறைவாக எடுத்து முடிக்க முடிகிறது. இருவரும் சேர்ந்து அந்த வேலையை முடிக்க ஆகும் நேரத்தை காண்க.

A) 8

B) 10

C) 6

D) 9

 

16) A can do a piece of work in 12 hours, B and C can do it 3 hours whereas A and C can do it in 6 hours. How long will B alone take to do the same work?

A என்பவர் ஒரு வேலையை 12 மணி நேரத்தில் முடிப்பார். B மற்றும் C அந்த வேலையை 3 மணி நேரத்திலும் A மற்றும் C அந்த வேலையை 6 மணி நேரத்திலும் செய்து முடிப்பர். அதே வேலையை B தனியே எவ்வளவு மணி நேரத்தில் முடிப்பார்?

A) 5

B) 4

C) 6

D) 3

 

17) A and B can do a piece of work in 12 days, while B and C can do it in 15 days whereas A and C can do it in 20 days. How long would each take to do the same work?

A மற்றும் B ஆகியோர் ஒரு வேலையை 12 நாள்களிலும் B மற்றும் C ஆகியோர் அதை 15 நாள்களிலும் A மற்றும் C ஆகியோர் அதை 20 நாள்களிலும் முடிப்பர். ஒவ்வொருவரும் தனித்தனியே அந்த வேலையை எத்தனை நாள்களில் முடிப்பர்?

A) A=30, B=20, C=60

B) A=30, B=20, C=50

C) A=20, B=30, C=60

D) A=30, B=60, C=20

 

18) Carpenter A takes 15 minutes to fit the parts of a chair while Carpenter B takes 3 minutes more than A to do the same work. Working together, how long will it take for them to fit the parts for 22 chairs?

தச்சர் A ஆனவர் ஒரு நாற்காலியின் பாகங்களைப் பொருத்த 15 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறார். அதே வேலையைச் செய்ய தச்சர் B ஆனவர் தச்சர் A விட 3 நிமிடங்கள் கூடுதலாக எடுத்துக் கொள்கிறார். இருவரும் இணைந்து வேலைச் செய்து 22 நாற்காலிகளின் பாகங்களைப் பொருத்த எவ்வளவு நேரமாகும்?

A) 150 நிமிடங்கள்

B) 160 நிமிடங்கள்

C) 180 நிமிடங்கள்

D) 200 நிமிடங்கள்

 

19) A can do a work in 45 days. He works at it for 15 days and then, B alone finishes the remaining work in 24 days. Find the time taken to complete 80% of the work, if they work together.

A ஆனவர் ஒரு வேலையை 45 நாள்களில் முடிப்பார் அவர் 15 நாள்கள் மட்டுமே வேலையைச் செய்கிறார். மீதமுள்ள வேலையை B ஆனவர் 24 நாள்களில் முடிக்கிறார் எனில், அந்த வேலையின் 80% இருவரும் இணைந்து முடிக்க ஆகும் நேரத்தைக் காண்க.

A) 14

B) 16

C) 15

D) 18

 

20) A is thrice as fast as B. If B can do a piece of work in 24 days, then find the number of days they will take to complete the work together.

A என்பவர் B என்பவரைக் காட்டிலும் வேலை செய்வதில் மூன்று மடங்கு வேகமானவர். B ஆனவர் ஒரு வேலையை 24 நாள்களில் முடிப்பார் எனில், இருவரும் இணைந்து அந்த வேலையை முடிக்க எத்தனை நாள்கள் எடுத்துக் கொள்வர் எனக் காண்க.

A) 4

B) 6

C) 4

D) 10

 

21) If 32 men working 12 hours a day can do a work in 15 days, then how many men working 10 hours a day can do double that work in 24 days?

32 ஆண்கள் நாளொன்றுக்கு 12 மணி நேரம் வேலை செய்து ஒரு வேலையை 15 நாள்களில் முடிப்பர் எனில், அந்த வேலையின் இரு மடங்கை எத்தனை ஆண்கள் நாளொன்றுக்கு 10 மணி நேரம் வேலை செய்து 24 நாள்களில் முடிப்பர்?

A) 42

B) 46

C) 48

D) 44

 

22) Amutha can weave a saree in 18 days. Anjali is twice as good a weaver as Amutha. If both of them weave together, then in how many days can they complete weaving the saree?

அமுதா, ஒரு சேலையை 18 நாள்களில் நெய்வார். அஞ்சலி, அனிதாவை விட நெய்வதில் இரு மடங்கு திறமைசாலி. இருவரும் இணைந்து நெய்தால், அந்தச் சேலையை எத்தனை நாள்களில் நெய்து முடிப்பர்?

A) 10

B) 8

C) 9

D) 6

 

23) P and Q can do a piece of work in 12 days and 15 days respectively. P started the work alone and then after 3 days, Q joined him till the work was completed. How long did the work last?

P மற்றும் Q ஆகியோர் ஒரு வேலையை முறையை 12 மற்றும் 15 நாள்களில் முடிப்பர். P ஆனவர் அந்த வேலையைத் தனியேத் தொடங்கிய பிறகு, 3 நாள்கள் கழித்து Q ஆனவர் அவருடன் சேர்ந்து வேலையானது முடியும் வரை அவருடன் இருந்தார் எனில், வேலையானது எத்தனை நாள்கள் நீடித்தது?

A) 8

B) 10

C) 7

D) 6

 

24) P alone can do ½ of a work in 6 days and Q alone can do 2/3 of the same work in 4 days. In how many days will they finish ¾ of the work, working together?

P என்பவர் தனியே ஒரு வேலையின் ½ பகுதியை 6 நாள்களிலும், Q என்பவர் தனியே அதே வேலையின் 2/3 பகுதியை 4 நாள்களிலும் முடிப்பர். இருவரும் இணைந்து அந்த வேலையின் ¾ பகுதியை எத்தனை நாள்களில் முடிப்பர்?

A) 6

B) 4

C) 3

D) 5

 

25) X alone can do a piece of work in 6 days and Y alone in 8 days. X and Y undertook the work for ₹48000. With the help of Z, they completed the work in 3 days. How much is Z’s share?

X என்பவர் தனியே ஒரு வேலையை 6 நாள்களிலும், Y என்பவர் தனியே அதே வேலையை 8 நாள்களிலும் முடிப்பர். X மற்றும் Y ஆகியோர் இந்த வேலையை ₹ 48000 இக்கு ஒப்புக் கொண்டனர். Z என்பவரின் உதவியுடன் அவர்கள் அந்த வேலையை 3 நாள்களில் முடித்தனர் எனில், தொகையில் Z இன் பங்கு எவ்வளவு?

A) ₹ 5000  

B) ₹ 6000

C) ₹ 4500

D) ₹ 5500

Post a Comment

4 Comments

  1. Replies
    1. GOOD SIR. PREPARE MORE TO ACHIEVE SIR. THANK YOU.

      Delete
  2. Replies
    1. GOOD SIR. PLS CHECK YOUR MAIL. WE SENT 2021 TNPSC EXAMS SOLVED MATHS QUESTIONS TO YOUR MAIL ID SIR. THANK YOU.

      Delete